வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரியில் புலமை பரிசில் மாணவர்களில் ஐவர் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தி.

வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து கல்லூரியில் அமரர் மாணிக்கவாசகம் ஐயா அவர்களின் ஆசீர்வாதத்துடன் தரம் 5 புலமை பரிசில் பரீட்ச்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் ஐவர் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளதுடன் 82.1% வீதத்தினர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று கொண்டுள்ளனர் அதனடிப்படையில்

1) அருண்குமார் தேஷ்னவி – 156
2) வாரபிரசாத் கிருஷ்விந்த் – 155
3) மனோராஜ் ஹேனுஷன் – 153
4) சரத்பாபு யதீஸ் -153
5) சரவணகுமார் யேனிஷா-151

மேற்படி ஐவரே வெட்டு புள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்தவர்களாவர் இம்முதல் வெற்றியை அமரர் மாணிக்கவாசகம் ஐயா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறோம் அத்துடன் அமரர் அவர்களின் குடும்பத்தினருக்கு விசேட நன்றிகளையும் தெரிவித்துகொள்வதோடு பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 62.5% வீதமான மாணவர்கள் 100 புள்ளிகளுக்குமேல் பெற்றுகொண்டுள்ளதோடு 82.1% வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்குமேல் பெற்றுகொண்டுள்ளனர்.

2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பாடசாலை ‘கல்வியின் காவலன்’ வள்ளல் அமரர் மாணிக்கவாசகம் அவர்களால் அவர்களுடைய சொந்த கட்டிடங்களுடன் கூடிய காணியை நீண்டகால பிரச்சினைக்கு தீர்வாக வத்தளை வாழ் தமிழ் சமூகத்தின் எதிர்கால சந்ததியினரின் கல்வி தேவைக்காக அரசுக்கு வழங்கி ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையில் சேர்ந்த முதல் தொகுதி மாணவர்களே இம்முறை முதல்முதலாக இப்பாடசாலையூடாக புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றியவர்களென்பது விசேட அம்சமாகும்.

இப்பாடசாலை உருவாக்கத்திற்காக முன்நின்று உழைத்தவர்கள் உட்பட புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை ஊக்கப்படுத்திய அதிபர்,பதில் அதிபர்,வகுப்பாசிரியர்கள் தரம் ஒன்றுமுதல் இவர்களை வழிநடாத்திய அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குவதோடு மாணவர்களுக்கு எமது வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.