தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பில் 4 பேருக்கு விளக்கமறியல்.

பொலிஸ் காவலில் வைத்து தமிழ் இளைஞரை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அடையாளம் , அடையாள அணிவகுப்பின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 8 ஆம் திகதி யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை முதல் சாட்சி அடையாளம் காட்டியதாக மாகாண நீதிமன்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் அவர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த வேண்டாம் என குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அணிவகுப்புக்கு உத்தரவிட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த யாழ் மாவட்டம் சித்தங்கேணியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாகராசா அலெக்ஸ் மற்றும் 20 வயதான சுதாகரன் துவாகரன் ஆகியோர் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நவம்பர் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில், துவாகரன் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களின் பின்னர், வட்டுக்கோடை பகுதியில் வைத்து சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் மல்லாவி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது , இளைஞரை நீதிமன்றக் காவலில் வைத்தனர். நீதிமன்ற உத்தரவின்றி எலும்பு முறிவு சிகிச்சைக்காக அலெக்ஸ் ஆயுர்வேத மருத்துவரிடம் பரிந்துரைக்கப்பட்டதும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருபத்தாறு வயதுடைய நாகராசா அலெக்ஸ், நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கீழ் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை, சித்தங்கேணியைச் சேர்ந்த இருபத்தியாறு வயதுடைய நாகராசா அலெக்ஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தமை இயற்கை மரணம் அல்ல, கொலையே என யாழ்.நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நவம்பர் 24 வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.