காலி சிறைச்சாலை கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு.

காலி சிறைச்சாலையின் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்தார் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவி;த்துள்ளார்.

காலி – கொட்டாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.