கிளிநொச்சி கால்வாய்க்குள் இருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு.

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதான வீதியில் கோவிந்தன் கடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

அந்த வீதியிலுள்ள நீர்ப்பாசன கால்வாய்க்குள் இன்று காலை இரண்டு தலைக்கவசங்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் கிளிநொச்சிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குப் பிரவேசித்த பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் முன்னிலையில் நீர்ப்பாசன கால்வாயிலிருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டனர்.

கிளிநொச்சி, கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன், அழகாபுரி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே சடலங்களாக மீட்கப்பட்டனர் என்று விசாரணைகளில் தெரியவந்தது.

மேற்படி இளைஞர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் வீழ்ந்தது எனவும், அதன்போது ஏற்பட்ட காயங்களால் இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

இந்தநிலையில், சடலங்களைப் பார்வையிட்ட நீதிவான் அவற்றை பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.