கடவுளை நம்பமாட்டோம்: மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த தலைமை ஆசிரியர் கைது!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்துக் கடவுள்களை நம்பமாட்டோம் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பராரி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியராக உள்ளவர் ரதலால் சரோவர், இவர் மாவட்ட கல்வி அதிகாரியால் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலில் சிலை பிரதிஷ்டை நடைபெற்றபோது, சரோவர், ரத்தன்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மொங்ஹதராய் கிராமத்தில் மாணவர்கள் உள்பட ஒரு குழுவைக் கூட்டியுள்ளார்.

அந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சிவன், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட இந்துக் கடவுள்களை வழிபடக்கூடாது, புத்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என மக்களை உறுதிமொழி ஏற்கவைத்ததாக வலதுசாரி அமைப்பின் அதிகாரி ரூபேஷ் சுக்லா புகார் அளித்தார்.

சரோவரின் இந்த உறுதிமொழி விடியோ மூலம் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, ஸனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலதிக செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து விபத்து – 2 பெண்கள் பலி; 50 பேர் காயம்!

பாஜக ஆதரவுடன் நிதீஷ் மீண்டும் முதல்வா்: ‘இந்தியா’ கூட்டணிக்கு மேலும் பின்னடைவு

சாந்தன், முருகன் உள்பட நால்வரை விடுவிக்க வேண்டும்: சீமான்

தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவு: கூட்ட முடிவுகள் அந்தரத்தில்! விடயத்தைத் தள்ளிப் போட மாவை, சிறீதரன் முடிவு!! – இணக்கம் வராத நிலையில் புறப்பட்டார் சுமந்திரன்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய எண்ணெய் கப்பலை தாக்கினர்.

ஜோர்டானில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் – 3 வீரர்கள் பலி.

ஐசிசி கிரிக்கெட் தடை நீக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.