பாடசாலையில் மரம் முறிந்து வீழ்ந்து 5 வயது மாணவன் சாவு! – மேலும் இருவர் காயம்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் 5 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கம்பளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றிலேயே இவ்வனர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கையிலேயே மரம் சரிந்து வீழ்ந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

காயமடைந்த இரு மாணவர்களும் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.