”பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசியானர். அப்போது காங்கிரஸை கடுமையாகச் சாடினார்.

கடந்த 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து மறுநாள் அதாவது பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் .

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வந்தது. இதில் பல்வேறு தலைவர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்து பேசியானர். அப்போது அவர், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரலாம்.. அதில் எந்தவொரு தவறும் இல்லை.. ஆனால் ஒரே குடும்பம் கட்சி நடத்துவது தான் குடும்ப அரசியல்.. ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயல்வதால் தான் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஒரு சிலரின் முக்கியத்துவத்தைக் குறைக்கக் கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள்.

நாங்கள் பேசுவது எங்கள் சோதனைகளை இல்லை.. இந்த நாடு செய்த சாதனைகளைத் தான் நாங்கள் பேசுகிறோம். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும். அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.. இதுதான் மோடியின் கியாரண்டி.

வந்தே பாரத், மேக் இன் இந்தியா, புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆகியவை இந்த நாட்டின் சாதனை.. இந்தியா மட்டுமின்றி உலக நலனிற்காகவும் இந்தியா பாடுபடுகிறது. இதை ஜி20 மாநாடு உலகம் உலக தலைவர்கள் புரிந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு மிகப் பெரிய குறிக்கோள்களுடன் உழைத்து வருகிறது. எனவே, நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் சமுதாயத்தை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்துகிறது. இதை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்த நிலைக்குக் காங்கிரஸ் தான் முக்கிய காரணம்.. காங்கிரஸ் செயல்பாடுகளால் அக்கட்சிக்கு மட்டுமில்லை.. பிற கட்சிகளுக்கும் நாட்டுக்கும் கூட மிகப் பெரிய இழப்பு.. அரசின் அனைத்து நடவடிக்கைகளை எதிர்ப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் கட்சிக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. காங்கிரஸின் மந்தமான ஊர்ந்து செல்லும் ஆட்சிக்கு உலகில் யாருமே போட்டி இல்லை.

பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். காங்கிரசுக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சியமைத்து 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும்.

ஏழைகளுக்கு தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்து கொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். சாலையோர வியாபாரிகள், கைவிணைக் கலைஞர்களுக்கு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பாஜக ஆட்சியில் 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு 4.8 கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ன. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்பங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு 3 கோடி பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளனர்.

தேசிய ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பேர் ஓ.பி.சி பிரிவில் இடம்பெற்றிருந்தனர் என கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சியில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் போன்ற ஆட்சி இருந்து இருந்தால் நாங்கள் செய்த சாதனைகளைச் செய்ய 3 தலைமுறைகள் ஆகியிருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்தியத் தூதரகப் பணியாளர் கைது

பாடசாலையில் மரம் முறிந்து வீழ்ந்து 5 வயது மாணவன் சாவு! – மேலும் இருவர் காயம்.

மரக்கிளை முறிந்து வீழ்ந்து 14 வயது மாணவன் பரிதாப மரணம்!

எமது தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர்கள் எமக்குச் சுதந்திர நாள் – கறுப்பு தினப் பேரணி நிறைவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிப்பு.

இலங்கையின் அபிவிருத்திக்கு முழு உதவிகள்! – செந்திலிடம் இந்தியத் தூதுவர் உறுதி.

இந்தியா சென்ற அநுர ஜெய்சங்கருடன் பேச்சு.

யாழில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆவா குழு மன்னன் கொழும்பில் கைது!

கார் விபத்தில், தாய் இறந்தார், சிறுமி, தந்தை மருத்துவமனையில்…

1990 களில், சுவாசார்யா ஆம்புலன்ஸ் சேவையில் கடுமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை.

ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் – 34 பேர் பலி.

நாடளாவிய ரீதியில் காலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேக நபர்கள் கைது.

அனுரவை அழைத்த இந்தியா : இன்று பயணம்.

Leave A Reply

Your email address will not be published.