பாராளுமன்றத்தை கலைத்து , ஜூலையில் பொதுத் தேர்தல்?

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூலை 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.

தற்போதைய மொட்டுக் குழுவின் ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லாமல் போவதையும், தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியையும் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி இந்த முடிவை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், அதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்று வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய மக்கள் அலையின்படி தேசிய மக்கள் படை அதிக ஆசனங்களைப் பெற்றாலும், விகிதாச்சார முறையில் தேர்தல் நடைபெறவுள்ளதால் , ஐக்கிய மக்கள் சக்தியாலும் சமமான ஆசனங்களை பெற முடியும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் , முஸ்லிம் எம்.பி.க்களை இணைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கும் திட்டமும், இதன் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சியுடன் , ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலையில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் பணப் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நேரப் பிரச்சினையையும் உருவாக்கும். இதன்படி, தன்னிடம் பணம் இல்லை என அறிவித்து ஜனாதிபதி தேர்தலை மேலும் ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட முடியும்.

Leave A Reply

Your email address will not be published.