அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு அலெர்ட் கொடுத்த பொது சுகாதாரத் துறை

ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், எல்லையில் உள்ள திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதற்கு பறவைக்காய்ச்சல் பரவலே காரணம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆந்திர எல்லையோரத்தில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களின் சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், இந்த 5 மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் பறவைக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் யாராவது வந்துள்ளார்களா என கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

நவல்னியின் மரணத்திற்கு புடின் தான் காரணம் – பிடன் கூறுகிறார்.

மாலைதீவின் வெளிநாட்டு கடன் நெருக்கடி குறித்து ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் 354 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு.

முதலாவது T20 யில் இலங்கை அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மனித – மிருக மோதலை தடுக்க வலியுறுத்தி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்

வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இன்சாட்-3DS

அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

Leave A Reply

Your email address will not be published.