பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறது இஸ்ரேல்!

மார்ச் 10 ஆம் தேதிக்குள் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் அமைச்சரவை உறுப்பினர் Benny Gantz இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசா பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான ரஃபாவிற்குள் தனது படைகள் எப்போது நுழையும் என இஸ்ரேல் அறிவிப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

Rafah பகுதியில் உள்ள முகாம்களில் சுமார் 1.5 மில்லியன் அகதிகள் வசிக்கின்றனர், Rafah பகுதியில் தாக்குதல்களை நடத்தப் போவதை சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.