தேஷபந்து தென்னகோனின் பதவிக்காலம் முடிய 10 நாட்கள் : டிரான் மற்றும் தேஷபந்துவுக்கு கொலை மிரட்டல்!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இரகசிய புலனாய்வு அறிக்கையொன்றில் இருந்து தெரியவந்துள்ளதாக சிலோன் டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக சிலோன் டுடே நாளிதழ் குறிப்பிடுகிறது.

அதற்காக இந்த பாதாள குழுக்கள் , பெரும் தொகையை ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கடத்தல்காரர்கள் தமது இலக்கை அடைவதற்காக இந்த பணத்தை அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து வரும் நீதி நடவடிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இந்த கடத்தல்காரர்களின் நோக்கம் என்று உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

எவ்வாறாயினும், 03 மாதங்களாக தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர் பதவி இன்னும் 10 நாட்களில் முடிவடைகிறது.

Leave A Reply

Your email address will not be published.