செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி… 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த 21-ஆம் தேதி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்கள், முன்னுக்கு பின் முரண்பாடாக உள்ளதாகவும்,
வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்ததற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உண்மை என விளக்கினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் வழக்கை 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்கவும் ஆணையிட்டு உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 5 முறை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் 2 வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலதிக செய்திகள்

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!

ஓட்டுநர் இல்லாமல் 70 கிலோமீட்டர் தூரம் வரை ஓடிய ரயில் (Video)

சாந்தன் காலமானார்

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்!

கடலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சும் சிங்கப்பூரின் ஆலை.

விமானத்தில் எலி, மூன்று நாட்கள் விமானம் நிறுத்தப்பட்டது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி பரிந்துரைகள் இன்று…

புர்கினா பாசோவில் ஒரே நாளில் இரண்டு தாக்குதல்களில் 27 கத்தோலிக்க-முஸ்லிம் வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஹெரோயினுடன் பாடசாலை ஆசிரியர் கைது!

திருப்பூர் பல்லடம் நிகழ்ச்சியில் பரபரப்பு – பிரதமர் மோடி மீது செல்போன் வீச்சு…!

Leave A Reply

Your email address will not be published.