தேர்தல் பத்திரங்கள் வழக்கில் எஸ்பிஐ மனு நிரகாரிப்பு.. உச்ச நீதிமன்றம் அதிரடி

தேர்தல் நன்கொடை பத்திரங்களை பெற்றது யார் என்ற விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து ஆணையிட்டுள்ளது. அரசியல் கட்சியினருக்கு தனிநபர்களும், கார்பரேட் நிறுவனங்களும் நன்கொடை அளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 15 ஆம் தேதி தேர்தல் பத்திரங்களை வெளியிட தடை விதித்து ஆணையிட்டது. மேலும் தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையும் பிறப்பித்தது. இந்த சூழலில் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் 15 ஆம் தேதி வரை அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தை பாரத ஸ்டேட் வங்கி நாடியிருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. SBI தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜரானார். அப்போது கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என SBI தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் அனைத்து தகவல்களும் அந்தந்த கிளை வங்கிகளில் இருந்து மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு சீலிட்ட கவரில் அனுப்பப்படும்,அதன் பின்னர் தரவுகள் சரிபார்க்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி கூறியதை சுட்டிக்காட்டினார்.

மொத்தம் 22472 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக 2019ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மொத்தம் 44,434 பத்திரங்கள் பெறப்பட்டதாக வங்கி தரப்பு கூறியது. இதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, வாங்கப்பட்ட பத்திர விவரங்கள்தான் கேட்கிறோம்,அதை சரிபார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த எஸ்பிஐ தரப்பு, தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டதால் அப்படியே வைக்கப்பட்டதாகவும், தற்போது அவற்றை சேகரிப்பதில் பிரச்னைகள் இருப்பதாக கூறியது. இந்த வாதங்களின்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, தேர்தல் பத்திரங்களை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

24க்கும் குறைவான அரசியல் கட்சிகள்தான் பத்திரங்களின் மூலம் நன்கொடை பெற்றபோது அதன் தகவல்கள் சேகரிப்பது சுலபம்தானே என்று நீதிபதிகள் கேட்டனர். தேர்தல் ஆணையத்திடம் தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

3 வாரங்களாவது அவகாசம் தேவை என்று வங்கி தரப்பில் கோரப்பட்டது. பொதுவெளியில் தகவல்களை வெளியிடாதது சட்டவிரோதம் என்று கூறியுள்ள நீதிபதிகள்,பாரத ஸ்டேட் வங்கியின் அவகாச கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் நாளை மாலைக்குள் தேர்தல் ஆணையத்தில் பத்திர விவரங்களை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் ஆணையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக செய்திகள்

யாழ்.மாவட்டங்களில் 109 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன!

நாட்டைக் கட்டியெழுப்ப மீண்டும் ஐ.தே.கவுடன் இணையுங்கள்! – கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் சஜித் அணியினருக்கு ரணில் அழைப்பு.

துஷ்டனாக வாழ்ந்த கோட்டா துரத்தப்பட்டமை தண்டனை! – அது சதி அல்ல என்கிறார் விக்கி.

பதவி ஆசை எனக்கு இல்லை; பதவி என்னைத் தேடி வந்தது! – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

விமான ஓடுதள விஸ்தரிப்புக்காக காணிகளைச் சுவீகரிக்கத் தீர்மானம் – யாழில் ஒத்துக்கொண்டார் சாகல.

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் சிக்கியது!

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளுடன் கலந்துரையாட விடுத்த ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றது தமிழ்க் கூட்டமைப்பு – சம்பந்தன் பங்கேற்பார் என்கிறார் சிறீதரன்.

கர்நாடகத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மன்சூரியனுக்கு தடை!

புதுச்சேரி சிறுமி கொலை: முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி

Leave A Reply

Your email address will not be published.