பெயிலாகிட்டா கல்யாணம் ஆகிடும்.. விடைத்தாளில் பகீர் கிளப்பிய மாணவி!

இந்தியாவில் பொதுத்தேர்வு முடிந்த நிலையில், அனைத்து இடங்களிலும் விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சில மாணவர்களின் விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பல நேரங்களில் மாணவர்கள் சரியாக படிப்பதில்லை. அதனால் விடைத்தாள்களில் தங்களின் சொந்த கதை, சோகக்கதை எல்லாம் எழுதி வைக்கிறார்கள். மேலும் சிலர் எப்படியாவது தேர்ச்சி பெற செய்யுங்கள் என விடைத்தாள்களில் ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அப்படி ஜபல்பூரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருத்திய விடைத்தாள்கள் தான் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.

அதில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது ஆங்கில தேர்வு விடைத்தாளில், தனக்கு உடல்நிலை சரியாக இல்லை, என்னை தேர்ச்சி பெற செய்யுங்கள். நான் தோல்வியுற்றால் எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். மேற்படிப்பை தொடர விடமாட்டார்கள். தயவு செய்து தேர்ச்சி ஆக்கிவிடுங்கள் என எழுதியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர், இது போன்று எழுதுவதால் மதிப்பெண்கள் கிடைக்காது, பதில் எழுதினால் மட்டுமே மதிப்பெண் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

கொலையாளிக்கு அனுதாபம் காட்டுங்கள் : தனுஷ்க விக்ரமசிங்க (குடும்பத்தை இழந்த கணவர் )

மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகளுக்கு கடவுச்சீட்டுக்குப் பதிலாக ‘கியூஆர்’ குறியீடு.

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திப்போம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

இந்தியன் ரோலர் படகுகளை உடன் தடுத்து நிறுத்துங்கள்! பதில் இல்லையேல் 25 இற்குப் பின்னர் தொடர் போராட்டம்!! – மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை; தூதரகத்திடம் மகஜரும் கையளிப்பு.

செப்டம்பர் 17 ‘ஹைதராபாத் விடுதலை தினம்’: மத்திய அரசு அறிவிப்பு

Leave A Reply

Your email address will not be published.