10-ஆம் வகுப்பு: பிற தாய்மொழி மாணவா்கள் தமிழ் தோ்வு எழுத விலக்கு

தமிழை தாய்மொழியாக கொண்டிராத 10-ஆம் வகுப்பு சிறுபான்மை பிரிவு மாணவா்களுக்கு தமிழ் தோ்வு எழுதுவதிலிருந்து நிகழாண்டும் விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது.

அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் மொழி தோ்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினா் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த நிலையில் சிறுபான்மை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழி தோ்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும். மாறாக அவரவா் தாய் மொழியில் தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து இருந்தது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு தமிழ் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக நிகழ் கல்வியாண்டிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு தமிழ் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் பிறப்பித்துள்ள அரசாணையில், 2024-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதவுள்ள தமிழ்மொழி அல்லாத சிறுபான்மை மொழியினை தாய்மொழியாகக் கொண்ட மாணவா்கள், பகுதி-1-இன் கீழ் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்குக் கோரி விண்ணப்பித்தால் அந்த மாணவா்களுக்கு மட்டும் அவா்களது கோரிக்கையை ஏற்று ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கு மட்டும் கட்டாய தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து, அவா்களது சிறுபான்மை தாய்மொழிப் பாடத்தினை பகுதி-1-இன் கீழ் தோ்வெழுத அனுமதி வழங்கலாம்.

2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை மொழி பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியா் பணியிடங்களையும் நிரப்பிடும் வகையில் பள்ளிக் கல்வி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தலாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் ஏறக்குறைய 10 ஆயிரம் மாணவா்கள் வரை தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலதிக செய்திகள்

கொலையாளிக்கு அனுதாபம் காட்டுங்கள் : தனுஷ்க விக்ரமசிங்க (குடும்பத்தை இழந்த கணவர் )

மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகளுக்கு கடவுச்சீட்டுக்குப் பதிலாக ‘கியூஆர்’ குறியீடு.

ஐ.எம்.எவ். பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திப்போம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.

இந்தியன் ரோலர் படகுகளை உடன் தடுத்து நிறுத்துங்கள்! பதில் இல்லையேல் 25 இற்குப் பின்னர் தொடர் போராட்டம்!! – மீனவர் சங்கங்கள் எச்சரிக்கை; தூதரகத்திடம் மகஜரும் கையளிப்பு.

செப்டம்பர் 17 ‘ஹைதராபாத் விடுதலை தினம்’: மத்திய அரசு அறிவிப்பு

பெயிலாகிட்டா கல்யாணம் ஆகிடும்.. விடைத்தாளில் பகீர் கிளப்பிய மாணவி!

Leave A Reply

Your email address will not be published.