மைத்திரி நாளை சி.ஐ.டிக்கு அழைப்பு! – ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் வெளிப்படுவார்களா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி அவரிடம் நாளை திங்கட்கிழமை வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை உண்மையாகவே நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தனக்குத் தெரியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் கண்டியில் வைத்து தெரிவித்திருந்தார்.

அவரின் அறிவிப்பு தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்து விசாரணைகளை நடத்துமாறு கோரி, பல தரப்பினரும் சி.ஐ.டியில் முறைப்பாடு தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு அவசர பணிப்புரை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மைத்திரி தொடர்பில் விசாரணை ஆரம்பமாகவுள்ளது. அவரிடம் சி.ஐ.டியினர் இது சம்பந்தமாக நாளை வாக்குமூலம் பெறவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.