அரவிந்த் கெஜ்ரிவால் கைது; பிரதமர் வீட்டை முற்றுகையிட முயலும் ஆம் ஆத்மி – பரபரப்பு!

பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சியினர் முடிவெடுத்துள்ளனர். இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில கன்வீனர் கோபால் ராய்,

“இன்று டெல்லி ஷஹீதி பூங்காவில் இருந்து ‘மக்கள் இயக்கம்’ தொடங்கும். பஞ்சாபில் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியின் எம்எல்ஏக்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒன்று கூடி பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தை நடத்துவார்கள்.

மார்ச் 25ம் தேதி ஹோலி கொண்டாடுவார்கள். ஆனால், அதற்கு அடுத்தநாள் பிரதமர் வீட்டை நாங்கள் முற்றுகையிடுவோம். மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்
பேஸ்புக் மூலம் அறிமுகமான 14 வயது மாணவி, நான்கு நபர்களால் பலாத்காரம்

விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் போலத்தான்: ராதிகா சரத்குமார்

போர்நிறுத்தத் தீர்மானம்: ஹமாஸ் வரவேற்பு

Leave A Reply

Your email address will not be published.