பேஸ்புக் மூலம் அறிமுகமான 14 வயது மாணவி, நான்கு நபர்களால் பலாத்காரம்

முகநூல் ஊடாக அடையாளம் காணப்பட்ட 14 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சகோதரர்கள் இருவர் உட்பட , நான்கு இளைஞர்களை கைது செய்ய அம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர் கொடுத்த கையடக்கத்தொலைபேசியை மாணவி, தனது காதலர்களுடன் பேச பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் அம்பிலிபிட்டிய பிரதேசத்திற்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு, மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அவள் கல்வி கற்கும் பாடசாலையில் கிரிக்கட் போட்டியொன்று இடம்பெற்ற போது, ​​பாடசாலையின் கழிவறையில் வைத்து முன்னாள் மாணவர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

இந்த முன்னாள் மாணவரும் , முகநூல் ஊடாகவே அடையாளம் காணப்பட்டதாகவே தெரியவந்துள்ளது.

இந்த குறைந்த வயது மாணவியின் தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிவதாகவும், தந்தை , தாயின் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் பணத்தை பெற , தாய் வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களை முன்கூட்டியே அறிந்து, முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட காதலர்களுக்கு , மாணவி தெரியப்படுத்தி , அவர்களை வீட்டிற்கு அழைத்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் ஒருவர் எம்பிலிப்பிட்டிய தலைமையக காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சிறுமி மேலும் பலரால் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளதாக சட்ட வைத்திய நிபுணர் , இது தொடர்பில் எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் மூன்று இளைஞர்கள் உட்பட , கடுமையாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்திய ஒரு இளைஞரை கைது செய்ய போலீசார் முயன்று வருகிறார்கள்.

லைக்கா ஞானம் அறக்கட்டளையால் 50 புகையிரத நிலையங்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி.

ராமநத்தம் அருகே சாலை விபத்தில் இளைஞர்கள் 3 பேர் பலி

சென்னையில் ஒன்றரை வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்- மீட்ட தீயணைப்புத் துறை!

இஸ்லாமிய பெண்கள் மீது கலர் தண்ணீர் ஊற்றிய இளைஞர்கள்- அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் சூட்டிய ‘சிவசக்தி’ பெயருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

இலங்கையில் McDonald’s உணவகங்களை நடத்த தடை!

Leave A Reply

Your email address will not be published.