தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு உடல்நிலை பாதிப்பு!
தில்லி முதல்வர் கேஜரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 நாள்களாக சிறையில் உள்ள நிலையில் கேஜரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
கேஜரிவாலுக்கு இரத்த சர்க்கரை அளவு 46 ஆக குறைந்துள்ள நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறையில் இருந்தபடியே முதல்வர் கேஜரிவால் அலுவலக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்
வடக்கில் கடந்த வருடம் 52 பேர் படுகொலை!
எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் – மொட்டுக் கட்சி சூளுரை.
சிங்கப்பூர்க் கப்பல் மோதி பாலம் ஆற்றில் விழுந்தது : மீட்பு நடவடிக்கை பல நாள்களுக்கு நீடிக்கலாம்.
கொரில்லா வேடத்தில் குரங்குக் கூட்டத்தை விரட்டியடிக்கும் ஊழியர்கள்
2024 அக்டோபர் 5ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
திடீர் பால் தட்டுப்பாடு – வருத்தம் தெரிவித்த ஆவின் நிர்வாகம்!
வீடு, நிலம் வாங்குறீங்களா? பத்திரப் பதிவு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!