யாழ். கடலில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – பெரியகல்லாறு, ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.

நேற்று மாலை மட்டி எடுப்பதற்குக் கடலுக்குள் சென்றவர் காணாமல்போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.