1900 ரூபாவுக்கு கொத்து ரொட்டி வேண்டாம் : வெளிநாட்டவரை துரத்திய ரவுடி வியாபாரி கைது…

கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்க போய் , அது விலை அதிகம் என மறுத்த வெளிநாட்டவர் ஒருவரை அவமதித்து அவமானப்படுத்திய வீதி உணவக ரவுடி வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Emeka Iwueze என்ற அமெரிக்கர், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடைக்கு விஜயம் செய்த போது, இலங்கையில் அவருக்கு ஏற்பட்ட மோசமான பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து அவரது வலைத் தளத்தில் வெளியிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட கடைக்காரர், மோசமாக அந்த வெளிநாட்டவரை , அந்த இடத்தை விட்டு துரத்தும் காட்சியை அநேகர் சமூக ஊடகங்களில் வைரலாக்கிய போது , Street Food கடைக்காரருக்கு எதிரான குரல்கள் எழுந்தன. அங்கே Get Out என அநாகரீகமாக துரத்தும் சாட்சிகளை பார்த்த போது , அது அநேக இலங்கையரை வெட்கப்படவைத்தது .

சுற்றுலாத்துறையின் மூலம் மீள திட்டமிடும் ஒரு நாட்டில், இப்படியான செயல்கள் அழிவை ஏற்படுத்துகிறது என்ற சமூகப் பேச்சு சில தினங்களுக்கு முன்னர் களுத்துறையில் ஆயிரம் ரூபாவுக்கு உளுந்து வடை மற்றும் தேனீர் ஒன்றைக் கொடுத்து ஏமாற்ற முயன்ற வியாபாரியின் நடத்தையில் இருந்து அரசல் புரசலாக ஆரம்பித்திருந்தது.
அந்த செய்தி இலங்கையில் 1 வடை , 1 தேனீர் (பிளேன்டீ) , 3 டாலரா? (800 ரூபா) : திகைத்து போன வெள்ளைக்காரர் (வீடியோ)

எவ்வாறாயினும், வெளிநாட்டவருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதோ அந்த வீடியோ :

Leave A Reply

Your email address will not be published.