அமலாபாலுக்கு நடந்த கொடுமை.. ஆறுதல் கூறிய விஷால்

சினிமாவைப் பொறுத்தவரை பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என்றும் #MeToo பிரச்சினை தலைவிரித்தாடி தான் வருகிறது. இந்த நிலையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, அநாகரிகமான வார்த்தைகளை வைத்து திட்டுவது என்று புகார் எழுந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக, கோலிவுட் கோரியோகிராபர் ஸ்ரீதரின் டான்ஸ் ஸ்டூடியோவில் ரிகர்சல் செய்து வந்துள்ளார் அமலா பால்.

அப்போது தன்னை ஒரு பிசினஸ் மேன் கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும், அவமானப்படுத்தியதாக, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இவ்வளவு தைரியமாக புகார் அளிப்பதற்கு நடிகர் விஷால், அமலாபாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பின்னர் அமலாபால் விஷால் தனது பக்கம் நிற்பதற்கு நன்றியை தெரிவித்த உள்ளாராம்.

நான் பாதிக்கப்பட்ட அந்த சமயத்தில் அவர் என்னை இறைச்சியை போல் வர்த்தகம் செய்ய தயாராக இருந்தார், இன்னும் அவருடைய தைரியம் என்னை நோய்வாய்ப்படுத்துகிறது அவருடைய இருப்பு என்னை நோய்வாய்ப்படுத்துகிறது என்று அமலாபால் தனது சமுக வலைதளத்தில் தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே சினிமாத்துறை படங்கள் வெளிவராமல் முடங்கி உள்ள சூழ்நிலையில், மெல்ல மெல்ல துவங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுபோன்ற #MeToo சம்பவங்கள் நடப்பதை சினிமாத்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை ரசிகர்கள் கோரிக்கை.

Leave A Reply

Your email address will not be published.