நடுவானில் பயங்கரம்.. குலுங்கிய சிங்கப்பூர் விமானம்.. ஒருவர் பலி, 30 பேர் படுகாயம் (Photo & Video)

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த போயிங் 777-300ER சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

A 73-year-old British man has died, and 30 others have been injured aboard a turbulent Singapore-bound flight that plunged 6,000 feet in a matter of minutes.

211 பயணிகள், 18 விமான ஊழியர்களுடன் உடன் லண்டனின் ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதில் பிரித்தானிய பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர் . இது விமான விபத்துகளில் மிகவும் அரிதானதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது ஓர் அரிதான சம்பவம். லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எங்கள் Boeing 777-300 ER ரக விமானம் SQ321 விமானம் வழியில் கடுமையாக குலுங்கியது. இதனால் விமானம் பாங்காக் நகருக்கு திருப்பிவிடப்பட்டு அங்கே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்கு விமானம் பாங்காக் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அரிதான இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதனை நாங்கள் உறுதி செய்கிறோம். இப்போதைக்கு விமானத்தில் உள்ள மற்ற பயணிகள் விமான ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் பயணிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்யும்படி கோரியுள்ளோம். மேலும், பாங்காக் நகருக்கு உடனடியாக எங்களுடைய குழு ஒன்று அனுப்பிவைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.