மாமாவின் கேமை , மருமகன் ஆட முடியாது – ரங்கேயின் கதைக்கு ஹரிணி பதில்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அறிக்கையின் ஊடாக தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தற்போது ஆஷு மாரசிங்க அந்தக் கதைக்கு உரம் சேர்ப்பதாகவும், ஆனால் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை எனவும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். .
நேற்று (31) மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் தேர்தலுக்கு பயப்படுகிறார்கள். மாமா காலத்துல நடத்தியவை இப்போது முடியாது. இப்போதைய மக்களிடம் அப்படி ஆட முடியாது. திங்கள்கிழமை பதில் சொல்வதாக ரங்கே சொல்கிறார். அதுவரை அரசியலமைப்பை வாசிக்கிறார் என நினைக்கிறேன். உங்களுக்கு சிறிதளவாவது ஒழுக்கம் இருந்தால், யதார்த்தத்தை எதிர்கொண்டு தோல்விக்கு தயாராகுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.