சிறுவனை கொடூரமாக தாக்கிய கோழி சமிந்த கைது

சமூக வலைதளங்களில் பரவி வரும் சிறுவன் ஒருவனை தாக்கும் காணொளி தொடர்பில் தப்பியோடிய குகுல் சமிந்த (45) மற்றும் சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த இரு பெண்களும் 37 & 46 , வெலிஓயா பொலிஸ் நிலைய மற்றும் புல்மோட்டை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அசிரிமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவினருடன், தாக்குதலுக்கு உள்ளான 4 வயது 06 மாத பாதுகாப்பாக சிறுவன் இருப்பதாகவும், சிறுவன் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் சிறுவன் தாக்கப்படும் சர்ச்சைக்குரிய காணொளி குறித்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த காணொளியின் படி சந்தேக நபர் வெலிஓயா ஹன்சவில கிராமத்தை சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டனர்.

குறித்த காணொளி கிடைத்தவுடன் வெலிஓயா நிலைய பொறுப்பாளர் இது தொடர்பில் செயற்பட்டு, காணொளி பதிவான முகவரியைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அதன்படி வெலிஓயா கல்யாணிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பின்னர், பொலிசார் ஊடனடியாக குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டதுடன், சம்பந்தப்பட்ட குழுவினர் ஏற்கனவே வீட்டை விட்டும், அப்பகுதியை விட்டும் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் அறிந்தனர்.

அதன்பின் கிடைத்த தகவல்களால் கோழி சமிந்த மாட்டினான்.

வீடியோ மற்றும் பழைய செய்தி
குழந்தையை கொடூரமாக தாக்கிய கோழி சமிந்தவை தேடும் போலீசார் (Video)

Leave A Reply

Your email address will not be published.