மூன்று மாகாணங்களில் அனைத்து மேலதிக வகுப்புகளுக்கும் தடை.

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில்
அனைத்து மேலதிக வகுப்புகளுக்கும் தடை

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கொரேனாத் தொற்று பல மாவட்டங்களிலும் பரவியுள்ளதையடுத்து மூன்று மாகாணங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, மத்திய மாகாணத்தில் மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து மேலதிக வகுப்புக்களுக்கும் தடை விதிக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்திலும் மீள் அறிவிப்பு வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், தென் மாகாணத்திலும் மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தென் மாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவே இந்தச் செயல்முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.