சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓட்டங்களால் தோல்வி.

கல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை பந்து வீச்சாளர்கள்  சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். கல்கட்டா அணியின் திரிபாதி, அரைசதம் அடித்தார்.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நேற்று நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை, தினேஷ் கார்த்திக்கின் கல்கட்டா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற  தினேஷ் கார்த்திக் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். கல்கட்டா அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. சென்னை அணியில் பியுஸ் சாவ்லா நீக்கப்பட்டு, கரண் சர்மா சேர்க்கப்பட்டார்.

கல்கட்டா அணிக்கு சுப்மன் கில்லுடன் இம்முறை திரிபாதி இணைந்து துவக்கம் கொடுத்தார். தீபக் சகார் வீசிய போட்டியின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் திரிபாதி.

சகாரின் அடுத்த ஓவரில் திரிபாதி ஒன்று, சுப்மன் இரண்டு என பவுண்டரிகளாக விளாசினர். சாம் கர்ரான் பந்துகளையும் திரிபாதி, எல்லைக்கு அனுப்பி வைக்க, கல்கட்டா ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இந்நிலையில் ஷர்துல் தாகூரை அழைத்தார் தோனி. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இவரது 2வது பந்தில் சுப்மன் கில் (11) அவுட்டானார்.

ராணா 9 ரன் எடுத்த போது, கரண் சர்மா சுழலில் சிக்கினார். சகார், கரண் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய திரிபாதி, பிராவோ பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் எட்டினார். சுனில் நரைன் (17), ஜடேஜா, டுபிளசியின் அசத்தலான ‘கேட்ச்சில்’ திரும்பினார்.

அபாயகரமான மோர்கன், 7 ஓட்டங்களை பெற்று அவுட்டானார். மறுபக்கம் சகாரின் நான்காவது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார் திரிபாதி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்ட்ரி ரசல், 2 ரன் எடுத்த போது, ஷர்துல் தாகூர் வேகத்தில் வீழ்ந்தார்.

கல்கட்டா அணியின் ஸ்கோரில் கிட்டத்தட்ட சரிபாதி ரன்கள் விளாசிய திரிபாதி (81), பிராவோ வேகத்தில் வீழ்ந்தார். தினேஷ் கார்த்திக் 12 ரன் எடுத்தார்.

கோல்கட்டா அணி 20 ஓவரில் 167 ஓட்ட்டங்களை பெற்று  அவுட்டானது. சென்னை சார்பில் பிராவோ 3, கரண் சர்மா, சாம் கர்ரான், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.