115,000 கோடியை கடனுக்காக வழங்குவதால் ரூபாவின் பெறுமதி குறையும் ஆபத்து

மிகவும் மோசமான முறையில் வீழ்ச்சி அடைந்துள்ள ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உறங்குவதாக நாட்டின் உயர்மட்ட வங்கியின் அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக குற்றசாட்டிய தினத்தன்றே இலங்கை மத்திய வங்கியினால் 115,000 கோடியை விடுவிக்கும் முடிவானது ரூபாவின் மதிப்பிழப்பு உள்ளிட்ட பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வணிக வங்கிகளால் மத்திய வங்கியில் கட்டாயம் வைப்புச் செய்ய வேண்டிய நிதியின் அளவை நான்கு வீதத்தில் இருந்து இரண்டு வீதமாக சட்டரீதியான இருப்பு விகிதத்தை (SRR) குறைப்பதன் மூலம் கடன் வழங்க வசதியாக 115 பில்லியன் ரூபாவை விடுவிக்க இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை கடந்த 16 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இது உரிமம் பெற்ற வங்கிகளின் நிதிச் செலவைக் குறைக்கவும் பொருளாதாரத்தில் கடன் ஓட்டத்தை துரிதப்படுத்தவும் நிதிக் கட்டமைப்புக்கு உதவியாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை நிதிக் கட்டமைப்பில் மையப்புள்ளியாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடனைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு 150,000 கோடி ரூபா நிதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆத்திரத்துடன் திட்டித்தீர்த்த பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்திற்குள் மத்திய வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கையை பாராட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நிதியை வர்த்தகரிகளின் கைகளில் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய கடன் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் சொல்லாட்சிக்கு பயந்து மத்திய வங்கி இவ்வாறான பொருளாதாரம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னணி பொருளாதார வல்லுநர் எச்சரித்துள்ளார்.

வைப்பாளர்களுக்கு குறைந்த நன்மை, திறைசேரி பற்றுசீட்டுக்கள் மற்றும் பிணைவிகித சரிவு, சந்தைக்குள் குறைந்த வெளிநாட்டு நாணய வரத்து, ரூபாவின் மேலதிக மதிப்பிழப்பு போன்ற பின்விளைவுகள் ஏற்படுவதுடன், இது ஏனைய துறைகளுக்கும் விரிவாகும் என சமூக வலைத்தளம் ஊடாக மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் புதிய தீர்மானத்துடன் வர்த்தகர்களுக்கு கடன் வழங்கும் வகையில் தாம் கோரிய ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவை பெற்றுகொடுத்த ஜனாதிபதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி 2020 மார்ச் மாதம் 27 ஆம் திகதி அன்று அறிமுகப்படுத்தப்பட்ட மறுமதீப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட 27 தசம் 5 பில்லியன் ரூபாவிற்கு மேலதிகமாக இலங்கை மத்திய வங்கியால், உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு 1 வீத சலுகை கடன் அடிப்படையில் பரந்த அளவான இணை வாக்குறுதிகளுடன் நிதி வழங்கப்படும் அதேவேளை

பல உள்ளுர் வர்த்தக செயற்பாடுகளுக்கு இந்த நிதி வசதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் அதேவேளை உரிமம் பெற்ற வணிக வங்கிகள் இந்த நிதியை 4 வீத கடன் அடிப்படையில் வர்த்தக செயற்பாடுகளுக்காக வழங்கவுள்ளன.

இந்த திட்டமும் தற்போதுள்ள மறு நிதியளிப்பு திட்டமும் கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட வர்த்தக செயற்பாடுகளுக்கென இந்த 150 பில்லியன் ரூபா நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதனைத் தவிர கட்டுமாணத் திட்டங்களுக்காக கடந்தகாலங்களில் ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு சமமான, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் சலுகை வட்டிவிகிதத்தில் கடனை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் நிதியுதவியுடன் அதே வர்த்தக செயற்பாடுகளுக்காக தனியான கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிந்தவு விரைவில் இந்தப் புதிய கடன் திட்டங்களுக்கான செயற்பாட்டு வழிகாட்டல்களை வழங்குவதாகவும் இலங்கை மத்திய வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.

Comments are closed.