⚓ மோடி–அதானி இணைந்து திறந்த விஷிஞ்ஞம் துறைமுகம் – கொழும்பு துறைமுகத்திற்கு புதிய சவால்?

இந்தியாவின் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்த விஷிஞ்ஞம் சர்வதேச ஆழக்கடல் துறைமுகம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தொழில் அதிபர் கௌதம் அதானி ஆகியோர் இணைந்து மிகுதி பெருமையுடன் திறந்து வைத்தனர்.
இந்த திட்டம்:
₹8800 கோடி இந்திய ரூபாய் செலவில் (இலங்கை மதிப்பில் ரூ.31,000 கோடி)
தனியார்–அரசாங்க கூட்டுத்திட்டமாக உருவாக்கப்பட்டது
அதானி குழுமம் மற்றும் கேரள அரசு இணைந்து செயல்படுத்தியது
ஆண்டுக்கு 10 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் திறன் உடையது
20 மீட்டர் இயற்கையான கடல் ஆழம் கொண்டது,
அதனால் உலகின் பெரிய கப்பல்களும் நேரடியாக நுழைய முடியும்
இந்த துறைமுகம், சர்வதேச கடல் வர்த்தக வழிகள் கடந்துசெல்லும் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது.
இதனால், இந்தியாவின் சர்வதேச கடல் வர்த்தக நிலைமையை வலுப்படுத்தும்,
மற்றும் முன்னிலையில் உள்ள இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு நேரடி போட்டியாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.