அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி.

ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதி நாளை புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார்.

அத்துடன், இந்த விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.