இந்தியன் பிறீமியர் கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டுபாயில் இன்று இரவு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியது. அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. கல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி 5-வது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக் குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
டெல்லி: மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கப்டன்), ஹெட்மயர், ரிஷாப் பண்ட், ரஹானே, பிரவின் துபே, அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், காஜிசோ ரபடா, நோர்டியா.
இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது

Leave A Reply

Your email address will not be published.