அனுஷ பெல்பிட்டவுக்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் நெருங்கிய சகாவும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவை, எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
46 மில்லியன் ரூபாவை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறியமைக்காக அனுஷ பெல்பிட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
