யாழ். மாநகர சபை முன்பாக அப்பிள் வியாபாரிகள் போராட்டம் – தர்சானந்தின் பிரேரணைக்கு எதிர்ப்பு.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்று மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
யாழ். நகரில் அமைந்துள்ள அப்பிள் கடைகளின் செயற்பாடுகள் தொடர்பாக உறுப்பினர் ப.தர்சானந்த் சபையில் முன்வைத்த பிரேரணையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், தமது கோரிக்கைகள் மற்றும் நியாயங்கள் அடங்கிய மகஜரை மாநகர சபை உறுப்பினர்களிடம் கையளித்தனர்.
நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தமக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் குறித்த பிரேரணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இதன்போது அவர்கள் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.



