மாகாணங்களுக்கான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்.

மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நீக்கப்பட்டன.

இருப்பினும், 24 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் படி, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த மட்டக்குளி, மோதர, புளுமென்டல்,கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ் மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்று தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தவிர மருதானை , கொழும்பு கோட்டை , புறக்கோட் டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கடவத் தை, ராகம, வத்தளை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறி விக்கப்பட்டுள்ளன.

அத்துடன் , இன்று அதிகாலை 5 மணி முதல் களனி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.