புதிய அரசியல் பயணத்துக்காக ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து சம்பிக்க விலகினார்

ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ளார்.

இன்று இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்ற ஜாதிக ஹெல உறுமய சிறப்பு தேசிய பிரதிநிதி மாநாட்டில் அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் இன்று பகல் வெளியிட்டுள்ளார்.

JHU விட்டு வெளியேறும் சம்பிக்க புதிய அரசில் பலம் ஒன்றை  நோக்கி நகர்வதற்காக அப் பதவியிலிருந்து வெளியேறியதாக தெரிய வருகிறது.

சம்பிக்கவுடன் மேலும் பலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களது பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.