கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் மூழ்கி இளைஞன் பலி.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளத்திற்குள்
மூழ்கி இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

இச் சம்பவம் இன்று (25) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் அடங்கலாக மூவர் கல்மடுகுளத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது
குறித்த இளைஞன் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான
இரத்தினம் லோகிதன் என்பவரே இச் சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.

இரண்டு மணிக்கு நீரில் முழ்கிய போதும் மாலை 6.30 கடந்தும் உடல்
நீரிலிருந்து மீட்கப்படாது இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.