கிளிநொச்சி பொறியியல் பீடத்தை சேர்ந்த வவுனியா மாணவனுக்கு கொரணா தொற்று.

யாழ். கொரோனா ஆய்வு கூட பரிசோதனையில் பொறியியல் பீடம் கிளிநொச்சியை சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வுகூட பரிசோதனை குறித்த நாளாந்த அறிக்கையில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 453 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனைக்கு உட்பட்ட பொறியியல் பீடம், கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.

இது குறித்து வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்  தெரிவிக்கையில், வெளி மாவட்ட்ங்களைச் சேர்ந்த 124 மாணவர்கள் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இவ்வாறு வருகை தந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர்களில் 24 வயதுடைய மாணவர் ஒருவருக்கு இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்ட மாணவன் வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்தவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மற்றைய அனைவரும் தொடர்ந்து 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.