உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர் 14 நாட்களின் பின் வீடு திரும்பினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஒருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார்.

நீர்கொழும்பு – கட்டுவபிட்டி தேவாலய தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த 36 வயதான திலின ஹர்ஷினி அப்புகாமி என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

நடன ஆசிரியரான இவரின் முள்ளந்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய போதிலும், அவர் பூரண குணமடையவில்லை.

உடலின் சில பகுதிகள் உணர்வற்றிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் அவரது இடது கண் அகற்றப்பட்டுள்ளது. விரல்கள் சரியாக செயற்படாமலுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தாக்குதலின் போது, அவரும் மூன்று பிள்ளைகளும் தேவாலயத்தில் இருந்த நிலையில், அவரது ஆறு வயதுடைய இரண்டாவது மகன் தாக்குதலில் உயிரிழந்தார். மற்றைய இரு பிள்ளைகளும் காயமடைந்து, குணமடைந்துள்ளனர்.

Comments are closed.