துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியா செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முதலியார்குளம் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜெறின் வயது 36 என்ற நபரே படுகாயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.