அணு சக்தி ஒப்பந்த விதிகளை கடைப்பிடிக்காத வரை ஈரான் மீதான பொருளாதாரத் தடை.

அணு சக்தி ஒப்பந்த விதிகளை கடைப்பிடிக்காத வரை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க ஜோ பைடன் மறுப்பு
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விதிகளைக் கடைப்பிடிக்காத வரை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராதவரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவின் முந்தைய அதிபர் டிரம்ப் விலகினாலும், மீண்டும் ஒப்பந்தத்தில் இணைய ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.