கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஒன்று மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஒன்று மாணவர்கள் இன்று (15) சிறப்பாக உள்வாங்கப்பட்டன.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளளில் உள்ள பாடசாலைகளில் தரம் 01 மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இன்று (15) திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

ஒவ்வொரு வருடமும் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் இடம்பெறுகின்ற போதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்நடவடிக்கைகள் பிற்போடபட்டன.

இந்நிலையில் இன்று சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் உள்வாங்கப்பட்டதுடன் தரம் ஒன்றுக்கு உள்ளவாங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பாலர் புரட்சி எனும் செயற்திட்டத்தின் கீழ் முதன் முறையாக மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டன.

வீடுகளில் மரக்கன்றுகள் நாட்ட இடமில்லாத மாணவர்களுக்கு பாடசாலை வளவில் மரக்கன்றுகள் நாட்டுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. இதற்கமைய பாடசாலை வளவிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.