கொலையில் முடிந்த கள்ளக் காதல் : காதலன் தூக்கிட்டு தற்கொலை (வீடியோ)

காதலியை கொலை செய்து கொழும்பில் உள்ள டாம் வீதி பகுதியில் காதலியின்  தலையில்லா முண்டத்தை கொண்டு வந்து  போட்டு விட்டுச் சென்று தற்கொலை செய்து கொண்ட புத்தள போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு எழுதிய கடிதம் போலீசார் வசம் கிடைக்கப் பெற்றுள்ளது.

கொலையான பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த திங்கட்கிழமை டாம் வீதி பகுதியில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட  தலையில்லாத உடல் குருவிட்டவில் உள்ள தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயது திருமணமாகாத பெண்ணின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தை டாம் வீதி பகுதிக்கு கொண்டு வந்ததாகக் கருதப்பட்ட  படல்கும்புராவில் வசிக்கும் 52 வயதான சப் இன்ஸ்பெக்டர் ஏ.எம். பேமசிரியை கைது செய்து விசாரணை  செய்ய போலீசார் களத்தில் இறங்கிய போது   , அவரது வீட்டின் அருகேயுள்ள ஒரு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய  நிலையில் அவரது உடல் இன்று காலை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரது உடலின் அருகே ஒரு பாட்டில் விஷமும் காணப்பட்டதாக போலீஸ் மீடியா செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.

இருப்பினும், இந்த சப் இன்ஸ்பெக்டரின் வீட்டில் காவல்துறையினர் புலனாய்வுகளை நடத்திய போது கண்டு பிடித்த  கடிதத்தில், தனக்கு ஒரு காதல் விவகாரம் இருப்பதாகவும், இதன் விளைவாக அவர் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் பல தவறுகளைச் செய்துள்ளார் என்றும், அதற்காக  அனைவரிடமும்  மன்னிப்பு கேட்பதாகவும் அவரது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

 தற்கொலை செய்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், தனது தாய் இறந்த மூன்று மாத கடனை நிறைவேற்ற   ஆறு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு திரும்பியபோதே இந்த கொலையை செய்துள்ளார். ​​இவர் புத்தள காவல் நிலையத்தின் கொரோனா தடுப்பு  பிரிவின் தலைவராக பணியில் இருந்து வந்துள்ளார்.

மூன்று குழந்தைகளுக்கு தந்தையான இவர், பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவிலும் பணியாற்றியுள்ளார், புத்தள  போலீசில் கடைமையில் சேருவதற்கு முன்பு, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியுள்ளார்.

கொலையான பெண்  ஹேஷா விதானகே எம்.பி.யின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து பணியாற்றியுள்ளார், அப்போதே இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது சகோதரரும் குருவிட்ட பிரதேச சபையின் ஐதேக உறுப்பினராக உள்ளார்.

கொலையான திலினி யசோதரா ஜெயசுந்தர (30) தனது தாயுடன் குருவிட்ட தெப்பனாவாவில்  வசித்து வந்துள்ளார்.

ஸ்ரீ பாத யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்காக நடத்தப்படும் தன்சாலைக்கு உதவி செய்யச் செல்வதாக  மகள் 28 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பின் டாம் வீதி பகுதியில் உள்ள சூட்கேஸில் திலினியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதன்படி, டாம் ஸ்ட்ரீட்டின் சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த பின்னர் ஒரு நபர் சூட்கேஸைத் தள்ளிக் கொண்டு செல்லும் காட்சிகள் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன.  அந்தக் காட்சிகளை  போலீசார்  ஊடகங்களுக்கு கொடுத்து  வெளியிட்டனர்.

 அதன்படி, சி.சி.டி.வி காட்சிகளில்  அவர் தனது பொதியை பாதை 143 ஹன்வெல்லவிலிருந்து கொழும்பு  நோக்கிச் செல்லும் ஒரு தனியார் பேருந்தில் பொதியுடன் நுழைவதைக் காட்டும் காட்சிகள்  ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டது.

28 ஆம் தேதி இரவு ஹன்வெல்ல பஸ் ஸ்டாண்டிற்கு அருகிலுள்ள விடுதியில்  பேமசிரி மற்றும் திலினி ஆகிய  இருவரும் தங்க வந்ததாக  போலீஸ் மீடியா செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.

1 ஆம் தேதி சூட்கேஸுடன் அந்த நபர் மட்டும் தனியாக விடுதியை  விட்டு வெளியேறியது  பின்னர் தெரியவந்ததாக ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

சி.சி.டி.வி காட்சிகளில் இருந்த நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை கழுத்தின் பின்புறத்தில் தொங்கிய பையில் சுமந்து சென்றிருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும், தலை எங்கே  என்பது இன்னும்  கண்டுபிடிக்கப்படவில்லை.

விடுதியிலிருந்து ஹன்வெல்ல பஸ் ஸ்டாண்டிற்கு சப் இன்ஸ்பெக்டர் பேமசிரியை ஏற்றிக் கொண்டு வந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநரை விசாரணைக்கு உட்படுத்திய போது  இந்த சம்பவம் குறித்து ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.

தற்கொலை செய்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர் விடுதியில் இருந்து ஹன்வெல்ல பஸ் ஸ்டாண்டை அடைய முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார். ஆனால்  முச்சக்கர வண்டி சாரதி தொழிலால் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அல்ல, வேலைக்காக ஒவ்வொரு நாளும் கொழும்புக்கு வந்து செல்லும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டி மற்றும் அதன் டிரைவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.

பின்னர், பொலிஸ் குழு ஒன்று அவருடன் சம்பவம் நடந்த விடுதிக்கு சென்று, கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் தற்கொலை செய்து கொண்ட பேமசிரி ஆகியோரின் அனைத்து விவரங்களும் விருந்தினர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டு பிடித்தனர்.

அதன்பின் அறையை பரிசோதித்த போது , சப்-இன்ஸ்பெக்டர் பெண்ணை கொலை செய்ததன் பின், அவர்கள் இருந்த அறை முழுவதையும் சந்தேகம் வராதபடி சுத்தம் செய்து விட்டு  அவர் வெளியேறியிருந்ததை அவதானிக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணை வெட்டிக் கொலை செய்த பிறகு உடலை  கழுவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அவரது நெருங்கிய நண்பர்கள் பலர் இந்த இளம் பெண்ணின் அகால மரணம் குறித்து முகநூலில் பல்வேறு உணர்ச்சிபூர்வமான கருத்துக்களைச் இணைத்துள்ளனர்.

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.