பேஸ்புக் மூலமான தொடர்பே கள்ளத் தொடர்பாக மாறி கொலையில் முடிந்தது.

டாம் வீதியில் கொலை செய்யப்பட்ட பெண் 30 வயதுடைய லின்னியாகுமார திலினி யசோதினி என்ற பெயருடையவராவர்.

இவர் குருவிட்ட தெப்பாகம படோகம என்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இவரின் சகோதரர் இப்பிரதேச அரசியல்வாதியாவார். சந்தேக நபர் 50 வயதான சப்இன்ஸ்பெக்டர் அதிகாரி முதியன்சலாகே பிரேமசிரி என்பவர் ஆவார்.

பொலிசார் நேற்று (2) இரவு சந்தேகநபரின் படல்கும்புர வெகரகொட வீட்டுக்கு தேடிச்சென்ற வேளையில், பின்கதவால் காட்டுக்கு தப்பிச்சென்றுள்ளார்.

இச்சந்தேக நபர் பொலிசார் வீட்டுக்கு வரும் வேளையில் தனது மனைவியுடனேயே இருந்துள்ளார்.

கடந்த 27ம் திகதி புத்ததல பொலிஸில் விடுமுறையில் சென்றுள்ளாளார். அதே தினம் இரவு 10 மணியளவில் அக்குகுறித்த பெண்ணுடன் ஹங்வல்லை பிரதேச ஹோட்டல் 106ம் இலக்க அறை ஒன்றில் தங்கியுள்ளார்.

அங்கே தங்கியிருந்த வேளையில் 3தடவை வெளியே சென்று திரும்பியுள்ளாளார்.

கடந்த முதலாம் திகதி காலை 10 மணியளவில் வெளியேறியுள்ளார். அவ்வாறு வெளியேறு முன்னர் இந்தப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஹோட்டலுக்கு 4100 ரூபா பில்லை செலுத்தியுள்ளதுடன் முச்சக்கரவண்டியிலேயே வெளியேறியுள்ளார்.அதன்போது குறித்த பயணப் பொதியையும் ஏற்றிச்சென்றுள்ளார்.

இதேவேளை தங்கிய அறையை பூரணமாக சுத்தம் செய்துவிட்டே வெளியேறி உள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்யட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொலை செய்து சில மணித்தியாலத்தின் பின்னே தலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அதிக ரத்தம் வெளியேரி இருக்கவில்லை. இருந்தும் குறித்த சடலத்தின் தலை இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

இதேவேளை பொலிசாரால் குறித்த பொதி சம்பந்தமாக ஊடகங்களில் அறிவித்ததை தொடர்ந்து, சந்தேகநபரால் குறித்த ஹோட்டலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹோட்டல் உரிமையாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரைப் பற்றி தகவல்கள் சொல்லப்பட்டால் ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்வதாக தொலைபேசியில் மிரட்டி உள்ளார். கொலை செய்தபின் சந்தேக நபர் குறித்த பொதியுடன் ஹங்வெல்லை நகர் பஸ் ஸ்டேன்டுக்கு வந்து 143 தனியார் பஸ்ஸில் கொழும்புக்கு வந்துள்ளார்.

அப்பெண்ணின் உள்ளாடைகளுடன் கூடிய பயணப்பை ஹங்வெல்லை நகரில் கண்டெடுக்கப்பட்டுள்து.

கொலை செய்யப்பட்ட பெண் சிவனொளிபாதமலை யாத்திரை செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியேறியுள்ளார்.

இச்சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியேறு முன்னர் தனது மனைவிக்கு ” நான் பெரிய தவறு ஒன்று செயதுவிட்டேன்.என்னை மன்னித்து விடு. இதனால் நீங்கள் அவமானப்பக்கூடும். அதைதாங்கிக்கொண்டு வாழ முயற்சியுங்கள்.

அம்மாவின் 3வது மாத அன்னதானத்தை கொடுங்கள்.பொலிசாரால் என்னை கண்டுபிடிக்கக்கூடிய இடத்தில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வெளியேறியுள்ளார்.

இக்குறித்த நருக்கு 18 வயதையுடைய மற்றும் 6 வயதுடைய பிள்ளைகள் உள்ளனர். மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த 2ம் திகதி குறித்த வனப்பகுதிக்குச் சென்று சத்தமாக கத்தி கூப்பிட்டும் குறித்த நபர் திரும்ப வரவில்லை. இந்நிலையிலேயே இவர் வனப்பகுதியில் மரத்தில் தொங்கி உயிரிழந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

லினியாகுமார துலானிகே திலினி யசோத ஜெயசூரியா (30) என அடையாளம் காணப்பட்டுள்ள இறந்த பெண்ணின் சகோதரர் உள்ளூர் அரசியல்வாதி மற்றும்
அவர் இளைஞர் சேவைகள் கவுன்சில் உறுப்பினராக இருந்தவர்.

குறிந்த பெண் சுவர்களை அலங்கரிக்கும் தன்னார்வ வேலைகளை செய்து வந்ததுடன், அவர் சமீப காலங்களில் வேலை எதுவும் செய்யவில்லை, முன்பு ஒரு ஆடை தொழிற்சாலை மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைகளை செய்து வந்துள்ளார்… கடைசியாக அவர் ஒரு கம்யூனிகேஷன்ஸ் இல் சிம் டீலராக பணிபுரிந்தார்.

தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவள் வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு முதல் அவர் தனது தாயை கவனித்து வருகிறார். அவரது தந்தை இறந்துவிட்டார் மற்றும் அவரது தாய் மற்றும் அரசியல்வாதியின் சகோதரருடன் வசித்து வந்தார்.

அவள் இந்த வீட்டில் இருக்கும்போது போலீஸ் அதிகாரியுடன் இணையம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த யுவதியுடன் பேஸ்புக் மூலமான தொடர்பே கள்ளத் தொடர்பாக மாறி கொலையில் முடிந்து உள்ளதாக மேலும் தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.