நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகளுக்கு தடை.

பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்கள் நான்கு வகையானவைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை இலங்கையில் தடை செய்வதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை (31) முதல் குறித்த பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில் ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்திக் போத்தல்கள், 20 மைக்ரோனுக்கு குறைவான லன்ச் ஷீட்கள், சஷே பக்கட்டுகள் (உணவு அல்லாத மற்றும் மருந்து அல்லாதவை), கொட்டன் பட் மற்றும் ஊதப்பட்ட பிளாஸ்டிக் பொம்மைகள் ஆகியவை அவற்றில் உள்ளடங்குகின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (29) சுற்றுச்சூழல் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது, மேற்கூறிய பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புகளை நாட்டில் உற்பத்தி செய்வற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு நாளை (31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பல நிறுவனங்கள் கோரியுள்ள கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, குறித்த பொருட்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும், அதுவரை குறித்த பொருட்கள் விற்பனை செய்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.