உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 80 பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் மோசடி விசாரணை!

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக உள்ள 80 அரசியல்வாதிகள் மீது இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குக் கல்வித்துறை தொடர்பில் அதிகளவு எண்ணிக்கையிலான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் ஆணைக்குழு அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.