மேக்அப் இல்லா அழகில் பிரியா பவானி ஷங்கர்!

புத்தாண்டு ஸ்பெஷலாக, பளீச் என மின்னும் மின்மினி பூச்சி போல் சிரித்தபடி, நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் இட்டுள்ளார். துளியும் மேக்அப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

கிளாமர் லுக்கில் சில சமயங்களில் அழகு ததும்பும் புகைப்படங்களை போட்டாலும், சில சயமயங்களில்… துளியும் மேக் அப் இல்லாமல் நேச்சுரல் அழகில் தோன்றி இளம் மனங்களை இம்சித்து வருகிறார் சுமார் 8 படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ப்ரியா பவானி ஷங்கர்.

சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக வலம் வந்த பிரியா பவானி ஷங்கர் இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேயாத மான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கைவசம் தற்போது படவாய்ப்புகள் எக்கசக்கம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

2021ம் ஆண்டை பொறுத்தவரை ‘குருதி ஆட்டம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘பொம்மை’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘கசடதபற’, ‘இந்தியன் 2’, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.