“பெண்” குறும்பட விருது விழாவில் மட்டக்களப்பிற்கு பெருமை!

நட்சத்திர கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் ‘பெண்’ குறும்பட விருது விழா 2021 வெற்றிகரமாக கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம் பெற்றிருந்தது. இதில் மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

பெண் இயக்குனர்களை தேடும் பயணம் என்று எடுத்துக் கொண்ட ஒரு விடயம் பல பேரின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்திருந்தது. இதன் வெற்றி விழாவை விருதுகளை வழங்கி கொண்டாடியிருந்தனர்.

குறும்பட போட்டிக்கு தமது படைப்புக்களை அனுப்பி வைத்திருந்தோரில் இருந்து நடுவர் குழாமால் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஐந்து குறும்படங்களின் வெற்றியாளர்கள் பெண் இயக்குனர்களை தேடும் பயணத்தில் வெற்றி பெற்றுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதில் “பெண் அவள் தேவதை” பெண்மையினை உயர்த்தும் நிழல் படமாக மட்டக்களப்பு கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் எஸ்.தமிழினியின் தயாரிப்பில் உருவான குறும் திரைப்படம் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினை பிடித்துள்ளது .

கொழும்பில் இயங்கிவரும் நட்சத்திர கலைக்கூடத்தின் ஆதரவில் அகில இலங்கை ரீதியிலான குறும் பட விருது விழாவானது ஸ்ரீலங்கா பவுண்டேசன் மண்டபத்தில் இடம் பெற்றது.

ஆண்டாண்டுக்காலம் பெண்ணின் மகத்துவம் பெருமை கண்டு வியந்த நாம் பெண்களை கொண்டாடி மகிழ இணைந்திடுவோம்” என்னும் தலைப்பில் இடம் பெற்ற அகில இலங்கை ரீதியிலான குறும்பட விருது விழாவில் மட்டக்களப்பு இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட “நிழல்களின் நிஜம்” நிழற்படம் ஐந்தாவது இடத்தினை பிடித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற உலக மகளிர் தினத்துக்காக இவ் குறும் படம் தயாரிக்கப்பட்டது. இதில் பின்வருவோர் நடித்துள்ளனர். நடிகர்கள் தமிழினி, கல்யானி, பிரமானந்தி, துவாரகா, மிருகாஞ்சினி, குழந்தை நட்சத்திரம் தரங்கினி, துணை நடிகர்கள் சுஜன், சத்துரு, உதவி சிந்து, விருத்திகா, சது, ஒளிப்பதிவாளர் நிதர்ஜனன், தொகுப்பாளர் ஜனார்தன், இயக்குனர் தமிழினி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இவ் நிழற்படம் உருவாக்கப்பட்டது.

மட்டக்களப்பு இளம் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட “நிழல்களின் நிஜம்” நிழற்படம் ஐந்தாவது இடத்தினை பிடித்துள்ளமையானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இவ்வெற்றிக்கு பெரிதும் பாடுபட்ட கலைஞர்களை மட்டக்களப்பு மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.