மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்டம்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் சித்திரை புதுவருடத்தினை வரவேற்கும்முகமாகவும் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை நினைவு கூறும் முகமாகவும் நிகழ்வென்று ஏற்பாடு செய்யப்பட்டு மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு பிரிவு – 01 இன் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி உட்பட சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

இதன் போது அதிதிகளினால் பாரம்பரிய உணவு பண்டங்களின் தாற்பரியம் தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டதனைத் தொடர்ந்து, அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பாரம்பரிய உணவு பண்டங்கள் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.