டாக்டர் படத்தை ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இப்படத்தை மார்ச் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். இதையடுத்து ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.