அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிப்பு.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 34 வயதான அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார்.

சென்னையை சேர்ந்த அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் இருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் மிகவும் தனிமையில் இருக்கக்கூடிய ஒன்றாகும். அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் விலகியுள்ளனர். சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.